அரியலூர் வாரணவாசி சமத்துவபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் வாரணவாசி அரசு உயர்நிலைப் பள்ளியில் அரங்கமேடை ரூபாய் 7 லட்சம் செலவில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடந்தது தலைமை ஆசிரியர் பொறுப்பு ரங்கமணி அனைவரையும் வரவேற்று பேசினார்
திருமானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழி முன்னிலை வகித்தார் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா அரங்கமேடைக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தங்கமூர்த்தி கீழப்பழுவூர் ஊராட்சி செயலாளர் நாகராஜன் வாரணவாசி ஊராட்சி செயலாளர் சபிதா திமுக ஒன்றிய துணைச் செயலாளர் தமிழரசிசுந்தரமூர்த்தி உட்பட ஏராளமானோர்
விழாவில் கலந்து கொண்டனர் ஆசிரியர் தா ஆஸ்டின் டேவிட் அனைவருக்கும் நன்றி கூறினார் பள்ளியின் சார்பில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
