திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு
ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை ஓவிய கண்காட்சி – 2025
திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா குளிர் அரங்கில் மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 7-30 மணி வரை நடைபெறுகிறது.
3 நாட்கள் ஓவிய கண்காட்சியில் 36 இளம் ஓவியர்களின் 144 ஓவியங்கள் இடம்பெறுகின்றன. ஒவிய கண்காட்சிக்கு டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகிக்கிறார்.
முதல்வர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றுகிறார். முதன்மை விருந்தினர் மேனாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கண்காட்சியினை திறந்து வைக்கிறார். கேரளா ஃபிலிம் ஆர்ட் டைரக்டர் ராஜசேகரன் பரமேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
ஓவிய கண்காட்சியில் இளம் ஓவியர்களின் செம்பு & வெண்கலம் காலம், பானை கோட்டோவியம், சிந்து வெளி தமிழ் எண்கள் தமிழ் தாய்,கீழடி வைகை ஆறு சிறப்புகள், சிந்து வெளிக்கும்- சங்க இலக்கியத்திற்கும்- தமிழ்நாட்டிற்ககும் உள்ள இணைகள், கடவுள்களின் புலப்பெயர்வு முருகன்,எருமை,ஐராவதம் மகாதேவன் -அடையாள குறீயீடுகள், சேவல் சண்டை ( சிந்துச்சமவெளி சண்டை சேவல்கள் குறியீடு), மொகஞ்சதாரோ பெருங்குளியலிடம் – சங்க இலக்கியத்தில் நீர் விளையாட்டு,
சிங்கம் யானை கலித்தொகை -103 ம் பாடல்,எலும்பை தின்னும் ஒட்டகம் , கொடுமணல் அகழாய்வு வெளிர் மரபின் புலப் பெயர்வு ,காட்டுக் கழுதை ,ஜல்லிக்கட்டு காளை: ( கொல்லேறு தழுவுதல்),கடச்சேனந்ததல் – கவுந்தியடிகள் ஆசிரமம்,சங்க இலக்கியம் குறிக்கும் காற்று ரோஜா,யாக் -கவரிமா இமயமலை, சுறா : நெய்தல்,
நடுகல்,அந்துவன்( தொல்காப்பியம்) – புலி மான் கோம்பை to ததாதபட்டியில் 2400 வருட பழமையான நடுகற்கள் கிடைத்தது),அழகன் குளத்து அகழாய்வு,கீழடி சங்கு வளையல்கள்,தேனூர் (2013 ம் ஆண்டு கிடைத்த 7 தங்க கட்டிகள் – கீழடி),வன்னி மரம் (கொற்கை), பாவை,வெம்பூர்- சித்திரக் கல்,ஏழு கோடுகள் கொண்ட சிந்து வெளி முத்திரைகள்,செம்பில் செய்தது போன்ற சுவர்கள்,கப்பல் முத்திரையும் காகமும்( சிந்து வெளிப் பகுதியில் கண்டறியப்பட்ட கப்பல் முத்திரைகள்) காக்கை பாடினியார் நச்சௌவையார்),அகில் மரம்,உறை கிணறு, நீர் மேலாண்மை,கீழடியில் கிடைத்த சூது பவளம் ‘ முத்துமணி, தந்தத்தால் செய்த பகடை , அசோகரின் கிர்னர் கல்வெட்டு மாங்குளமும் தமிழ் பிராமி கல்வெட்டும் தலைப்பில் ஓவியங்கள்
