தாராபுரம், திருப்பூர். மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பதட்டமான இடங்களை, கோவை மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் சசி மோகன் தலைமையில் நேரில் ஆய்வு. இந்த மாதம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி
இந்தியா முழுவதும் வெகு சிறப்ப கொண்டாடப்பட்டு வரும். இந்த நிலையில் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதட்டமான இடங்களில் காவல்துறை மேற்கு மண்டல துணைத் தலைவர் சசி மோகன் தலைமையில் அமராவதி சிலை ரவுண்டானம், பூக்கடை முக்கு சந்திப்பு, ஜவுளிகடை வீதி சந்திப்பு, சுல்தானியா மசூதி பகுதி,
ஐந்து முக்கு சந்திப்பு, விநாயகர் சிலை கரைக்கும் மற்றும் மீட்டிங் நடக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிருஷ் அசோக், தாராபுரம் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார். காவல் ஆய்வாளர்கள் விஜய சாரதி, சரவணன், சஜினி சார்பு ஆய்வாளர் உட்பட்ட காவலர்கள் கலர் உடன் இருந்தனர்.
