தாராபுரம் நகராட்சி,மற்றும் சின்னகாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளை துவக்கி அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் நகராட்சி மற்றும் சின்னகாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மூலதானம் நிதி மானியத்திட்டம் மற்றும் அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தனர்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்ததாவது,தாராபுரம் நகராட்சி மற்றும் சின்னகாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணியை திறந்து வைத்து புதிய திட்டப்பணிகளை துவக்கி வைக்கப்பட்டது.

முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்கள்..

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி வார்டு எண்.19 வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயனியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, சின்னக்காம்பாளையம் பேரூராட்சி வார்டு எண் 13, செலாம்பாளையத்தில் மூலதனம் நிதி மானியத்திட்டத்தின் கீழ் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டடம் மற்றும் வார்டு எண்.13 காங்கயம்பாளையத்தில் அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.55.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய நல கட்டடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்..