திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் மாற்றம் சேவை அறக்கட்டளை சார்பில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார கட்டிடத்தை திரைப்பட நடிகரும், அறக்கட்டளை நிறுவனருமான ராகவா லாரன்ஸ் மற்றும் கலக்க போவது யாரு புகழ் பாலா ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் நடைபெற்ற நலத் திட்ட விழாவில் போதைக்கு ஆளாகாதீர்கள் என்றும், கல்வி ஒன்றே மாணவர்களின் எதிர்கால சொத்து என்றும் பேசினர். இந்த நிகழ்வில் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் முனுசாமி, முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகி விடுதலை மணி உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்து சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.