திருச்சி மாவட்டம், பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறை சார்பாக ,நடைபெற்ற நகரமிய முகாம் 2025 சமூக பணி சார்ந்த பணியில்,சமூகப் பணித்துறை மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டனர்..
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறை மற்றும் கரூர் மாவட்டத்தில் செயலாற்றிவரும் பயனுள்ள பாத்திரம் அறக்கட்டளையும் இணைந்து நகரமிய முகாம் 2025 எனும் ஜந்து நாள் முகாமை ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றது.
சமூகப் பணித்துறை மாணவர்களால் விழித்தெழு என்ற தலைப்பில் செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது இந்நிலையில் அரசு காலனி பகுதியில் முகாமின் முதல் நாள் நிகழ்வு துவங்கப்பட்டது..
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற இதில், சமூகப் பணித்துறை மாணவர்கள் பல்வேறு கலாச்சார நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்..
தமிழ்நாடு சமூக சேவை சங்க செயலாளர் அருட்தந்தை டேவிட் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற முகாம் துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜே ஜி ஆர் சத்தியசீலன் மற்றும் பயனுள்ள பாத்திரம் அறக்கட்டளையின் இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அரசு காலனி மக்களிடையே உரையாற்றினர்..
முகாமில் சமூகப் பணித்துறை தலைவர் முனைவர் கார்டர் பிரேம்ராஜ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இம்முகாமில் சமூகக் கணக்கெடுப்பு, மருத்துவ முகாம், காசநோய் கண்டறிய பரிசோதனை, பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொது வளாகங்களை தூய்மைப் படுத்தல், என பல்வேறு நிகழ்வுகளை முதுகலை சமூகப் பணித்துறையின் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து ஒருங்கிணைத்தனர்..
