முசிறி அருகே வடக்குப்பட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் ராஜகோபால், திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பேருந்தில் பணியில் இருந்தபோது, வேலாயுதபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜகோபால் அளித்த புகாரின் பேரில், லால்குடி போலீசார் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்ணை
க. மாரிமுத்து.