திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மதியம் 12- மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நிகழ்வில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க.தனித்தமிழ் மாறன், பேரூர் அவைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், பொருளாளர் எல். புருஷோத்தமன் துணை செயலாளர்கள் வி.சி.ராஜேந்திரன், வசந்தி பாஸ்கர், லாயம் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி எஸ். ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் சிங்குதெரு எஸ்.ஆர்.ராஜேஷ், வி.சதானந்தம், 6- வது வார்டு திமுக பொருளாளர் கோ.சண்முகசுந்தரம் யாதவ் ,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள், இந்து சமய அறநிலையத் துறையின் திருவாரூர் உதவி ஆணையர் ராணி,ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி, திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். வழிபாடு முடிந்ததும் பெண்களுக்கு புடவைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொது விருந்தும் நடைபெற்றது.
சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
