திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியின் 100 -ஆவது ஆண்டு புனித மரியன்னை மேனிலைப்பள்ளியின் கலையரங்கத்தில் இறை வழிபாட்டுடன் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்க்கு வருகை தந்துள்ள முக்கிய விருந்தினர்களை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்.மரியலூயிஸ் சேகர் வரவேற்றார்.இதில் பள்ளியின் புனித மரியன்னை கலைமனைகளின் அதிபர் அருள் பணி.மரிவளன் சே.ச அடிகளாரது தலைமையிலான இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.உஷா, மாவட்ட கல்வி அலுவலர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சென்னை VRS Leathers (Ltd) Ltd நிறுவனத்தின் நிருவாக இயக்குநரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான Rtn.ராஜா சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வியில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பள்ளியில் தான் கற்ற மதிப்பீடுகளை பற்றி சிறப்புரையாற்றினர்.

மேலும் பள்ளியின் முன்னாள் மாணவர் இயக்க முதன்மை புரவலர் SKC குப்புசாமி சிறப்பு பங்கேற்று சிறப்பித்தார்.பள்ளியின் தலைமையாசிரியர் அருள்பணி அடிகளார்.ஸ்டீபன் லூர்து பிரகாசம் சே.ச, ஆங்கில வழிக் கல்வி இயக்குநர் அருள்பணி அடிகளார்.தெரஸ்நாதன் சே.ச, கூடுதல் உதவி தலைமையாசிரியர். நோயல் ராஜ் ஆகியோர் 2024-2025 ஆம் ஆண்டறிக்கையை சமர்பித்தனர். மேலும் இவ்விழாவில் மாணவர்களின் பங்கேற்பு பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.