திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றோர்கள் சந்திப்பு மற்றும் வழி காட்டுதல் நிகழ்வு கல்லூரியின் கலையரங்கத்தில் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் மாணவ, மாணவிகள் முன்னின்று தமிழ்த்தாய் வாழ்த்து, குத்துவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி, வரவேற்புரை, நாட்டுப்பண் ஆகியவற்றை நடத்தினார்கள்.

மேலும் பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றிய விளக்கங்கள் பற்றி கல்லூரியின் முதல்வர் ஜான் லூயிஸ் பெற்றோர் சந்திப்பு கூட்டம் குறித்து பேசுகையில், சமுதாயத்தில் அவலங்களாக உள்ள போதைப் பொருட்கள் மற்றும் செல்போன் போன்ற அடிமைகளுக்கு ஆளாகாமல் மாணவர்கள் நன்கு படித்தும், தொடர் பயிற்சி மூலம் அர்ப்பணிப்போடு மனதினை ஒழங்குப்படுத்தி மாணவர்கள் கல்வியை புரிந்து படிப்பதன் மூலம் வாழ்வின் சிறந்து விளங்க முடியும் என எடுத்துரைத்தார்கள்.

இக்கூட்டத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் துறை தலைவர் முனைவர் பாலச்சந்தர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கணினித் துறை பேராசிரியை அனிதா மற்றும் அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.270 க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்ட நிகழ்விற்கு கணினி துறையின் பேராசிரியை அனிதா நன்றி கூறினார்.