செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட எழில் கேத்தரின் மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக எழில் கேத்தரின் நிறுத்தப்பட்டார்.
இவர் தொகுதி முழுதும் தீவிர பிரச்சாரம் செய்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றார். மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேலுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆதரவோடு இரண்டாவது இடத்தை பெற்றவர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட எழில் கேத்தரின். தமிழக வெற்றி கழகம் தொடங்கி இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மீதான நம்பிக்கையில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுராந்தகம் தொகுதியில்
தனக்கு வாக்களித்த வாக்காளர்கள் கட்சி நிர்வாகிகள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு
தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
