தாராபுரம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நந்தவனம் பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட ஆத்திகாடு கிராமத்தில் வீடு கட்டி 60ஆண்டுகளாக குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட 40 குடும்ப மக்களுக்கு உடனடியாக பட்டா மின்சாரம் வழங்க வேண்டும். என்று ஆதித்தமிழர் மக்கள் பேரவை நிர்வாகிகள் சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசுக்கு வேண்டுகோள்
நந்தவனம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட ஆத்தி காடு என்ற கிராமத்தில் க.ச. எண்.759/3A-ல் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் 40 குடும்பங்கள் அப்பகுதியில் அறுபது ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் இந்நிலையில் இம்மக்கள் 60 ஆண்டு காலமாக பஞ்சாயத்தில் வீட்டு வரிசெலுத்தியும் மின் இணைப்பு பெற்று மின்சார வரி செலுத்தியும் இந்த நிலையில் இம்மக்கள் வசிக்கும் வீட்டிற்கு இன்று வரையிலும் பட்டா இல்லாமல் வசித்து வருகிறார்கள், இவ்விடத்திற்கு பட்டா கேட்டு 20 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் என பல மனுக்கள் கொடுத்தும் கூட இன்று வரையிலும் இம் மக்களுக்கு பட்டா கிடைக்காத ஒரு அவல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்,
இந்த நிலையில் இம்மக்கள் குடியிருக்கும் இந்த இடமானது 70ஆண்டுகளுக்குமுன் பூமிதான வாரியத்தால் ஒரு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது ஆனால் அன்றிலிருந்து 60 ஆண்டுகள் ஆகியும் இவ்விடத்தை தனக்கானது என்று உரிமைகொண்டாடி யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஒருவேளை இவ்விடம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருவருக்கு அரசு வழங்கி இருந்தாலும் கூட 60 ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருக்கும் இம்மக்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டு இவ்விடம் தனிநபர் ஒருவருக்கு பட்டா வழங்கி இருந்தால் அப் பட்டாவை உடனடியாக ரத்து செய்து 60 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களான 40 குடும்ப மக்களுக்கு பட்டா வழங்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தை சார்ந்த நிர்வாகிகள்.
