காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
வெள்ளகோவில் காங்கேயம் எல் ஐ சி கிளையில் எல் ஐ சி நிறுவனம் கின்னஸ் சாதனை புரிய வணிகம் செய்த முகவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையில் மிகப்பெரிய நிறுவனமான எல் ஐ சி 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை சொத்து மதிப்பு ரூ 54.52 லட்சம் கோடி உள்ளது,
இதில் 26.85 கோடி பாலிசிதார்கள் உள்ளனர், மொத்தம் 8 மண்டலம், 113 கோட்ட அலுவலகம், 2048 கிளை அலுவலகம், 1570 துணை கிளை அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. இதில் 98 ஆயிரத்து 661 இன்சூரன்ஸ் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், 14 லட்சத்து 39 ஆயிரத்து 658 இன்சூரன்ஸ் முகவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த 2025ம்ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அன்று எல் ஐ சி நிறுவனம் 24 மணி நேரத்தில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 107 பாலிசிகளை விற்பனை செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது,
இந்த கின்னஸ் உலக சாதனை படைக்க காங்கேயம் கிளையில் பாலிசிகளை விற்பனை செய்த முகவர்களுக்கு நேற்று காங்கேயம் கிளை மேனேஜர் எம்.மகேஷ். வெள்ளகோவில் துணை கிளை மேனேஜர் கே.வி.ரவி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
