கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் தேவேந்திர குல வேள்ளாளர் உறவுகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போது மாவட்ட தலைவருமான சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் செய்தியாளர்களிடம் சந்தித்த சுவாமிநாதன் கூறுகையில் தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் பிரிவுகளில் இருந்து ஏற்கனவே இருந்த பிசி பட்டியலில் மாற்றம் செய்து தர வேண்டி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆணவக்கொலை என்பது பட்டியலின மக்களில் எங்களை வைத்துள்ளதால் தான் இச்சம்பவம் நடைபெறுகிறது ஆணவ படுகொலையை தடுப்பதற்கு பட்டியலில் இருந்து நீக்குவது தான் சரியானது2026 தேர்தலில் பட்டியலில் இருந்து வெளியேற்றதற்கான முன்னெடுப்பை எந்த கட்சி எடுக்கிறதோ அதற்கு தான் எங்களுடைய ஆதரவு இதனை அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டு எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், புறக்கணிக்கப்பட்டு வந்த எங்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமான் அவர்களுக்கு நன்றி மேலும் தேவேந்திர குல வேளாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்த மத்திய பாஜக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

அனைத்துக் கட்சிகளிலும் தேவேந்திர குல வேளாளர்கள் இருந்தாலும் அரசியல் அதிகாரம் கேள்விக்குறியாக உள்ளது எந்த அரசியல் கட்சியினரும் எங்களுக்கு சரியான விகிதாச்சாரியாபடி அமைச்சராக அவையில் இடம் கொடுக்கவில்லை 2 கோடி மக்கள் தொகை கொண்ட எங்களுக்கு 60 முதல் 70 எம்.எல்.ஏ க்கள் வரை இருக்க வேண்டும். எங்களை ஏமாற்றும் விதமாக பட்டியல் என்ற விலங்குகள் போல அடைத்து வைத்துள்ளனர்.

இதற்கு மிகப்பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும் எனக்கு கூறினார். இவ்விழாவில் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் விசுவை காமராஜ் முன்னிலை வகித்தார்.

இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற சென்னை காவல்துறை உதவி ஆய்வாளர் மு.ராஜேந்திர ராஜா கலந்து கொண்டார். பின்னர் பொருளாளர் ஜெயபாலன் நன்றியுரையாற்றினார்.