கோவை செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள சிருஷ்டி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா போட்டி தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் யோகா பயிற்சியாளர் சதீஸ் தலைமையில் நடைபெற்றது,

5 வயது முதல் 30 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் என 400 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியினை பள்ளியின் தாளாளர் பொன்னுசாமி, மற்றும் ராஜேஸ்வரி பொன்னுசாமி, மற்றும்,யோகமித்ரன் சேகர், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்..

இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் யோகா செய்வதன் மூலம் பெறும் உடல் ஆரோக்கியம் மனவலிமை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பல்வேறு விதமான யோகாசனங்களை போட்டியாளர்கள் செய்து காண்பித்தனர்..

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு யோகா பயிற்சியாளர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.