அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 13வது பள்ளி விளையாட்டு விழா சிறப்பாக நடந்தது

விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஸ்வேஷ்பாலசுப்ரமணியம்சாஸ்திரி விழாவிற்கு தலைமை தாங்கினார் பள்ளிதாளாளர் அருட்சகோதரிபிரேமா அனைவரையும் வரவேற்று பேசினார் போலீஸ் டிஎஸ்பி ரகுபதி தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

விளையாட்டு போட்டிகள் ஐஸ்கிரீம் கோன் கேம் வாத்து நடை சைக்கிள் பந்தயம் செங்கல் தூக்குதல் நொண்டி அடித்தல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பெற்றோருக்கான இசை நாற்காலி தடைகளை தாண்டி செல்லுதல் போட்டி காய்கறிகளை அடுக்கி வைத்தல் குச்சிகளை தாங்கிப் பிடித்தல் ஆகிய போட்டிகள் நடந்தன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ்பாலசுப்ரமணியம்சாஸ்திரி போட்டிகளில் வெற்றி பெற்றவருகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்

அரியலூர் வழக்கறிஞர் இரா மனோகரன் ஜமீன்வெங்கடேசன் சோபனாபன்னீர்செல்வம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி ராயம்மாள் அருட் சகோதரர் சபரி அருட்தந்தை சகாயராஜா அருட் சகோதரி கிரேசி அருட்தந்தை கிளேன் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர் கடந்த ஆண்டு 10 11 12 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த வர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது