சென்னை,
செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை-16 இல் உள்ள செயின்ட். தாமஸ் அகாடமி சீனியர் செகண்டரி CBSE பள்ளி, 620 மாணவர்கள் 15 நிமிடங்களில் 620 தனித்துவமான சைபர் பாதுகாப்பு குறிப்புகளை எழுதி, 620 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை உருவாக்கி, சைபர் மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அபூர்வமான உலகச் சாதனையை படைத்துள்ளது.

இந்த சாதனை ஐன்ஸ்டீன் உலகச் சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பான நிகழ்வை பள்ளி இயக்குனர் மற்றும் தாளாளர் மதிப்பிற்குரிய ரெவ. ஃபாதர் எட்வின் லாரன்ஸ் மற்றும் முதல்வர் சிஸ்டர் மேரி மஞ்சுளா தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தினர்