கோவை உலக அமைதி வேண்டி விபாஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கோயமுத்தூர் 5 கே மாரத்தான் போட்டி வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 6 மணி அளவில் கொடிசியா முன்பு நடைபெறுகிறது.

இது குறித்து கோயமுத்தூர் 5 கே மராத்தான் அசோசியேசன் தலைவர் எஸ்.பிரபு கூறியதாவது: உலக அமைதியை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கோவையில் மாபெரும் மராத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடத்தி வருகிறோம்.

கடந்த 12 வருடங்களாக கோவையில் பல்வேறு இடங்களில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது. வரும் 17-ஆம் தேதி காலை 6 மணி அளவில் கோவை கொடிசியா முன்பு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மூன்று பிரிவாக தனித்தனியாக மாபெரும் மராத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்கு ஒருவருக்கு ரூ.300 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ. 5 ஆயிரம் மூன்றாவது பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் ராயல் கேர் மருத்துவமனை சி.இ.ஓ செந்தில்வேலை சந்தித்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்குவதை காணலாம்.

படத்தில் கோவை 5கே மராத்தான் அஸோஸியேசன் மாவட்ட தலைவர் ரைசிங் ஸ்டார் எஸ்.பிரபு, மாவட்ட செயலாளர் பூபேஸ், பொருளாளர் சுடலை மணி, செயற்க்குழு உறுப்பினர் மெடிக்கல் மாதேஸ் ஆகியோர் இருப்பதை காணலாம்.