பாரதிய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தின் எல்ஐசி மேட்டுப்பாளையம் கிளைச் சங்க துவக்க விழா காரமடை ஆசிரியர் காலனி கே ஆர் எஸ் மினி ஹாலில் நடைபெற்றது கோவை கோட்டத் தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார் கோவை கோட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்
கோவை கோட்ட துணைத் தலைவர் ஈ. கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார் விழாவில் மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஏ கே செல்வராஜ்,,ஸ்ரீனிவாச ராமானுஜம்,, சக்திவேல், தேசிய குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன்,,பாரதீய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்க நிர்வாகிகள் சீதாராமன்,ஜெயபால்,தியாகராஜ்,வேல்முருகன் ஜோதி குமார்,ரவிக்குமார், தியாகராஜன், சி. கோபாலகிருஷ்ணன் முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் அகில பாரத பொதுச் செயலாளர் ஆர் ஈஸ்வரமூர்த்தி அகில பாரத தலைவர் செல்வகுமார், கோவை கோட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் முடிவில் மேட்டுப்பாளையம் கிளை செயலாளர் ராம் லட்சுமணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மேட்டுப்பாளையம்,காரமடை, அன்னூர், சிறுமுகை, பகுதியிலிருந்து எல்ஐசி முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் கிளை புதிய நிர்வாகிகள். தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக எம். கோவிந்தராஜ், துணைத்தலைவர்களாக சந்திரசேகர், சுந்தர்ராஜ், செயலாளராக ராம் லட்சுமணன், இணைச் செயலாளர்களாக கலைவாணி, கஜலட்சுமி, பொருளாளராக முருகேஷ்,மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சதீஷ், கோபாலகிருஷ்ணன், ரவி, சுரேஷ்குமார், கணேசன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
