தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் 351 வரலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
வரலட்சுமி பூஜையில் கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்லா செல்வங்களும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், தொழில்வளர்ச்சி எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து தமிழகம் அமைதிபூங்காவாக அனைவரும் ஓற்றுமையுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் வரலட்சுமி கலசத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது.திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.