திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அனிதா மாரியப்பன், உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளரும், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமான முனைவர் ஆதலையூர் சூரியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் இலக்கிய மன்றங்களைத் தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில்:- மாணவர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் போது தங்களுடைய சிந்தனைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு, நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழக அரசு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
அது போல திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்குகிறது. அவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் வெற்றி அடையலாம் என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் பல்வேறு மன்றங்களின் பொறுப்பாசிரியர்கள் வினோதா, செந்தமிழ், நளினி, வகிதா, ஜெயராஜ், விஸ்வநாதன், சகாயராணி, கலைவாணி, செந்தில், ராணி, உமா, பிரியா, தனலட்சுமி, கிரிஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
