அரியலூர் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் அரசு மருத்துவமனை அரியலூர் கிங்ஸ் லயன் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு சங்கத்தின் தலைவர் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார் செயலாளர் ராமலிங்கம் பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சாசன தலைவர் மதியழகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் தாய்ப்பாலின் அவசியம் குழந்தைகளின் நலன் குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்

டாக்டர்கள் மணிமாறன் சரவணன் பத்மபிரியா ரம்யா அருண்குமார் யாசின் பி சரவணன் ஆகிய மருத்துவர்கள் தாய்மார்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தாய்மார்களிடம் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார்கள். தாய்மார்களுக்கு சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது அரிமா சங்க உறுப்பினர்கள் குழந்தை வேலு சன் சுரேஷ் மோகன் முருகானந்தம் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்