திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை 10- மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

மாலை 6- மணிக்கு 28- ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையை குடந்தை ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலரும், குடந்தை அன்னபூர்ணா குருப்ஸ் இராணி தனபாலன் தலைமையில், குடந்தை அன்னபூர்ணா குருப்ஸ் ஆர். லெட்சுமிபாலா முதல் திருவிளக்கை ஏற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆலய பரம்பரை அறங்காவலர் கே. நடராஜன், திருப்பூர் இந்தியன் ஸ்டீல் உரிமையாளர் எஸ்.கே. மணி ( எ) துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையில் 262 சுமங்கலிகள் கலந்து கொண்டு நடைபெற்று அம்மனுக்கு தீபாராதனை நடைப்பெற்று பக்தர்களுக்கு, பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அறங்காவலர் வலங்கைமான் கே. நடராஜன் & சகோதரர்கள் மற்றும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளையினர் சிறப்பாக செய்து இருந்தனர்.