தஞ்சாவூர், ஆக- 2. தஞ்சாவூர், வல்லம் செயின்ட் சேவியர் நடுநிலைபள்ளியில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மக்களைத்தேடி மருத்துவம். இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 போன்ற சீர்மிகு திட்டங்களின் வரிசையில் நலம் காக்கும் ஸ்டாலின் என்னும் முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதையொட்டி நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் சென்னை மயிலாப்பூரில் சென்ட் பீட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர், உயர் கல்வி துறை அமைச்சர் கே.வி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம், துரை.சந்திரசேகரன், அண்ணாதுரை, அசோக்குமார். வல்லம் பேரூராட்சி பெருந்தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த பரிசோதனை, இ.சி.ஜி எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்பட்டது. பொது மருத்துவம், மகப்பேறு, கண், மனநலம் மருத்துவம், அறுவை சிகிச்சை நிபுணர், நுரையீரல், இதயம், எலும்பு முறிவு, நரம்பியில், தோல், காது-மூக்கு தொண்டை, பல் மருத்துவம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுண்கதிர், அல்ராசவுண்ட் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது.

மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். எக்கோ கார்டியோகிராம் (ECHO), பெண்களுக்கான கர்ப்பபைவாய் மற்றும் மார்பக புற்று நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.