தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் புதிய மாநிலவரி அலுவலகம் திறப்பு

ரூ.2.53 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் முதல்வர் மு க ஸ்டாலின் காணொலிக்காட்சி வழியாக திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாநிலவரி அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 31) சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த புதிய அலுவலக கட்டிடம் 4520 சதுர அடியில் அமைந்துள்ளது. தரைத்தளத்தில் வணிகவரி அலுவலர்களுக்கான அறைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் உள்ளன. முதல் மாடியில் கூட்ட அரங்கு, பதிவு அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

திறப்பு விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், திருப்பூர் வணிகவரி இணை ஆணையர் கா.மா.கார்த்திகேயனி, நுண்ணறிவு இணை ஆணையர் ப.விமலா, கோட்டம் துணை ஆணையர்கள் மைதிலி, பொன்னுசாமி, சோபனா, நல்லரசி, நாகராஜி, தாராபுரம் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, மாநிலவரி அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.