எஸ். திருபாலா செய்தியாளர்
அந்தியூர்,ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோவில் ஆடித் தேர்த் திருவிழா, வரும் 13 முதல் 16 வரை நடக்கிறது.
பர்கூர் ரோடு, கூச்சிக்கல்லுார் ரோடு, கரை பெருமாள் கோவில், குருநாதபுரம், வனம் செல்லும் வழி, மைக்கேல்பாளையம் மணக்காடு உள்ளிட்ட இடங்களில், தற்காலிக சைக்கிள், பைக், கார் ஸ்டாண்ட் அமைப்பதற்கான ஏலம், அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் நடந்தது.
பி.டி.ஓ., அமுதா தலைமையில் நடந்த ஏலத்தில், 15 பேர் கலந்து கொண்டு, ஐந்தாயிரம் ரூபாய் டெபாஸிட் செய்தனர். அரசு ஏலத்தொகையாக, இரண்டு லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
இதில், மந்தையை சேர்ந்த சிவலிங்கம் என்பவர், மூன்று லட்சத்துக்கு 14 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை செலுத்தி ரசீது பெற்றார். மற்றவர்களுக்கு டெபாஸிட் தொகை திரும்ப வழங்கப்பட்டது.
