திருத்தங்கல் நாடார் கல்லூரி, தமிழ்த்துறை சார்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக, இலண்டன், தளிர் தமிழ்ப் பள்ளி முதல்வர், அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகச் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் திருமகள் சிறீபத்மநாதன் அவர்களும் சுவிற்சர்லாந்து, சுவிஸ் தமிழ் கல்விச்சேவை,தமிழ் ஆசிரியர், அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை, சர்வதேச ஒருங்கிணைப்பாளர் நா.இரதி கமலநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் அ.நாராயணமூர்த்தி, கல்லூரி முதல்வர் வெ.தேவி வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். மேலும் கல்லூரியில் துணை முதல்வர் முனைவர் k. c. லலிதாம்பிகை, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜோ.சம்பத்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
