கந்தர்வகோட்டை ஜூலை 30 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மன்ற செயல்பாடுகள் மூலம் ஒவ்வொரு மாதமும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஒவ்வொரு தலைப்பிலும் முக்கிய தினங்கள் குறித்து கட்டுரை ஓவியம் கதை சொல்லுங்கள் நடைபெற்று வருகிறது.
சர்வதேச நண்பர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா சர்வதேச நண்பர்கள் தினம் குறித்து பேசும் பொழுது மக்கள், நாடுகள், கலாச்சாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையிலான நட்பு அமைதி முயற்சிகளை ஊக்குவிக்கும் மற்றும் சமூகங்களுக்கு இடையே பாலங்களை கட்டமைக்கும் என்ற கருத்துடன் 2011 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையால் சர்வதேச நட்பு தினம் அறிவிக்கப்பட்டது.
பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய சமூக நடவடிக்கைகளில், சர்வதேச புரிதலையும் பன்முகத்தன்மைக்கான மரியாதையையும் ஊக்குவிக்கும் வகையில், எதிர்காலத் தலைவர்களாக இளைஞர்களை ஈடுபடுத்துவதை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. மாணவர்கள் தங்களுடைய நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். முன்னதாக வானவில் மன்றத்தின் சார்பில் மாதிரி ரோபோட்டை உருவாக்கிய ஆறாம் வகுப்பு மாணவி தேவதர்ஷணியை தலைமையாசிரியர் பாராட்டினார்.
. முன்னதாக இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மருத்துவத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.. இந்நிகழ்வில் நிவின், கணிப்பொறி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோ கலந்து கொண்டனர். ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.
