. கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. இந்த யானைகள் உணவிற்காக அடிக்கடி மலையை ஒட்டியுள்ள விவசாய விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்நிலையில் கோவை சாடிவயல் அடுத்த சோலைப்படுகை என்ற பகுதியில் நள்ளிரவில் மூன்று யானைகள் தோட்டப்பகுதிக்கு வந்துள்ளது.மீண்டும் காட்டுக்குள் சென்ற போது இரண்டு யானைகள் வனத்திற்குள் சென்ற நிலையில் 35 வயது தக்க ஒரு யானை மட்டும் அங்கிருந்த நிர்மலா என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

இதனை அடுத்து வனத்துறையினரின் உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு படைத்துறையினர் இன்று காலை நீண்ட நேரம் போராடி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த யானையை மீட்டனர்.

விவசாய கிணற்றில் யானை விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.