கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:
அரியலூர் நகராட்சி ஏ ஐ டி யு சி சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் நகரத்தில் அதிகரித்து வரும் குப்பை கழிவுகளை அகற்றிட போதுமான ஆட்களை நியமனம் செய்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஏ ஐ டி யு சி சுகாதார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
ஏ ஐ டி யு சி உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் டி. தண்டபாணி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் அரியலூர் ஒன்றிய செயலாளர் து பாண்டியன் தனசிங் சிவக்குமார் மருதமுத்து கோவிந்தசாமி நல்லுசாமி வெங்கடேசன் நாகூரான் காத்தவராயன் மருதமுத்து உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் போராட்டத்தின் நோக்கம் குறித்து டி தண்டபாணி விளக்க உரையாற்றினார் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
