முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை வீசுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடற் இணைந்து சாலையோரம் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க அனுமதி கேட்டு நீலகிரி ECO கமிட்டி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்…….

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிப்பதால் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் நடுவே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக புகழ்பெற்ற சுற்றுலா தளமாக திகழக்கூடிய கேரளா, கர்நாடகாவிலிருந்து உதகைக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு மட்டுமல்லாமல் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வனச் சாலை வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் வனவிலங்குகளின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால் இதனை தவிர்க்கும் வகையில் பிளாஸ்டிக் மது பாட்டில்கள் உள்ளிட்டவைகளை வனப்பகுதிகளில் வீசுவது மற்றும் வாகனங்களை அதிவேகமாக இயக்கி செல்வதை தவிர்க்க வனச்சாலை ஓரங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் நீலகிரி ஈகோ (ECO)கமிட்டி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் இயற்கை சுற்றுச்சூழல் தன்னார்வல அமைப்பினர் மனு அளித்தனர்.