தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
கல்லூரியின் போதைப்பொருள் தடுப்புக்குழுத் தலைவராக கல்லூரி முதல்வர் முனைவர்.மி.மில்டன்ராஜ் அவர்களும் ஒருங்கிணைப்பாளராக திருமதி. எழிலரசி அவர்களுடன் செயல்பட்டு வருகின்றனர். கல்லூரியின் பயிற்சி மாணக்கர் சார்பில் போதை ஒழிப்பு மன்றத்தின் பிரதிநிதிகளாக இளங்கல்வியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஸ்பெபி மற்றும் முதலாம் ஆண்டு மாணவி கனிமொழி பொறுப்பு வகித்து வருகின்றனர்.
கல்லூரியின் ஒவ்வொரு காலைக் கூட்டத்திலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து போதைப்பொருள்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முழுவதும் திகழ போதை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்று வருகின்றோம்.
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் போதையில்லா தமிழ்நாடு என்ற மையக்கருத்தில் அய்யம்பேட்டை பட்டுசாலியர் தெருவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் மி.மில்டன்ராஜ் தலைமை தாங்கினார். இவரின் வழிகாட்டுதலின் படி போதைப்பொருள் எதிர்ப்பு குழு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள் மற்றும் எதிர்ப்புக்குழு மாணவர்களும் கலந்து கொண்டனர்.
