எஸ். டி. பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்ட கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மருத்துவ சேவை அணி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம் கோரிப்பாளையத் தில் மருத்துவ சேவை அணி மதுரை வடக்கு
மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமையில் நடைபெற்றது ..

நிகழ்ச்சியில் மதுரை வடக்கு பொதுச் செயலாளர் பக்ருதீன் பொருளாளர் செந்தில்குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜியா பேகம், வழக்கறிஞர் அணி மதுரை மண்டல தலைவர் பஷீர் தீன் வர்த்தக அணியின் மாவட்ட இணைச்செயலாளர் முகமது அலி தொழிற்சங்கத்தின் செயலாளர் பக்ருதீன் சாதிக் சமூக ஊடக அணியின் மாவட்ட செயலாளர் பெரோஸ்கான் வடக்கு தொகுதி தலைவர் முகமது அலி ஜின்னா
கிழக்குத் தொகுதி தலைவர்சையது வலியுல்லாஹ் செயலாளர் உத்தங்குடி சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவர் பிலால்தீன் மாவட்டச் செயலாளர் சீனி சிக்கந்தர் சமூக செயற் பாட்டாளர் அப்துர் ரஹ்மான் தாவத்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ..
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவ சேவை அணி நிர்வாகிகள்
பிரசன்னா, சேக்பரீத் , ராஜா முஹம்மது சேக்தாவூத் , ஜமால், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பாக செய்தனர், கட்சியின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர் கோரிப்பாளையம் 28 வது வார்டு தலைவர் பீர்முகமது நன்றி கூறினார்.