வலங்கைமான் அருகே செம்மங்குடியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தில் கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் உள்ள வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு சாலையில் பெரிய அளவில் பள்ளங்களை ஏற்படுத்தி விபத்துகளை ஏற்படும் வகையில் உள்ளது. எனவே கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.