இந்திய தர அமைவனத்தின் கோவை கிளை அலுவலக இயக்குனரும், தலைவருமான ஜி.பவானி வேண்டுகோள்

இந்திய தர நிர்ணய அமைவனம் கோவை கிளை சார்பாக, பொறியியல் துறைகளில் உள்ள பொருட்களின் தர நிலைகள் மற்றும் அதற்காக வழங்கும் ஐ.எஸ்.ஐ., பி.ஐ.எஸ். ஹால்மார்க் தரச்சான்றிதழ்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடைபெற்றது….

உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் (பி .ஐ .எஸ்) எனும்
இந்திய தர நிர்ணய அமைவனம் நுகர்வோரின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகின்றது..

தர நிர்ணயத்தின் முக்கியத்துவங்களை அனைத்து துறைகளிலும் கடை பிடிக்கும் முறைகளை சட்ட ரீதியாக விதமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்தும் விழிப்புணர்வுகளை இந்திய தர நிர்ணய அதிகாரிகள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்..

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக, கோவை மண்டலத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் கோவை கிளை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நீர் வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இதில் இந்திய தர அமைவனத்தின் கோவை கிளை அலுவலக இயக்குனரும், தலைவருமான ஜி.பவானி தலைமை வகித்து பேசினார்.

இதில் பொறியியல் துறைகளில் உள்ள பொருட்களின் தர நிலைகள் மற்றும் அதற்காக வழங்கும் ஐ.எஸ்.ஐ., பி.ஐ.எஸ். ஹால்மார்க் தரச்சான்றிதழ்களை பற்றியும், பி.எஸ்.ஐ. கேர் ஆப் என்ற செயலியின் மூலம் எவ்வாறு சரிபார்ப்பது என்பது பற்றியும் விரிவான விளக்கவுரை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து, இந்திய தர அமைவனத்தின் கோவை கிளை அலுவலக இயக்குனரும், தலைவருமான ஜி.பவானி கூறுகையில்,
பி.ஐ.எஸ்.சார்பாக பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு தர நிர்ணயங்கள் குறித்த விளக்கங்கள், தரச் சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறைகள் மற்றும் தர நிர்ணயங்களை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்த அவர், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்கள் இந்த தர நிர்ணயங்களை அறிந்து, தங்கள் பணிகளில் தரமான பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார்..