தேனியில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் மாவட்ட தலைநகரான தேனியில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பொதுத்துறை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது

என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஏ.ஜ.டி.யு.சி. தொ. மு.ச. ஐ என். டி யு சி உள்பட 13 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் தேனி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அரசின் தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தேனி தனியார் திருமண மஹாலில் அடைத்து வைக்கப்பட்டு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.