கடத்தூர்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி நடுர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன

இந்த நிலையில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திங்கட்கிழமை கொடியேற்றி கங்கணம் கட்டிய செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு கூழ் ஊற்றியும் புதன்கிழமை நேற்று மாவிளக்கு எடுத்து தாளநத்தம் பேருந்து நிலையம் ரயில்வே கேட் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மாவிளக்கு ஊர்வலம் தாரதப்பட்டை வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று கோவிலை வந்தடைந்தது,

பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்