தருமபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் ஆக வெப்ப நிலை அதிகமாக பதிவாகி வந்த நிலையில் இன்று காலை முதலே வெப்பம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென தருமபுரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இலக்கியம்பட்டி, பாரதிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அதியமான் கோட்டை, வெங்கடம்பட்டி, வத்தல்மலை, உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. மழையின் காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாலை நேரத்தில் பெய்த மழையால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு சென்றவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். தற்போது பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
