தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு காலனி பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு தேனி எம்பி நிதி உதவி தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு காலனியில் முகம்மது இர்ஃபான் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் உயிரிழந்த குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் தனது சொந்த பணத்தில் ரூபாய் 1 லட்சம் பணத்தை வழங்கினார். மேலும் கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் அவர்களும் உயிரிழந்த குடும்பத்தாருக்கு ரூபாய் 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்

மேலும் இந்த விபத்து குறித்து மின் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் அந்தப் பகுதி ஒரு காலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது தற்பொழுது குடியிருப்புகள் அதிகமானதால் அந்த வழியாக செல்லும் உயிர் அழுத்த மின் கம்பிகளை இட மாற்றம் செய்ய தனது எம்பி நிதியிலிருந்து நிதி ஒதுக்கி குடியிருப்பு பகுதிகளில் உள்ள மின்சார கம்பிகளை இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நகர்மன்ற உறுப்பினர் தீன் உள்பட பலர் உடன் இருந்தனர்