பாபநாசம் அருகே புளியக்குடி ஊராட்சியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழைக்கன்று நடும் போராட்டம் …..

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் புளியக்குடி ஊராட்சி, வடக்குதோப்பு புளியக்குடியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் குண்டும் குழியுமாக சேரும் சகதிம்மாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது

இதன் வழியாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் , விவசாயிகள், சென்று வரவும் மற்றும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் இதன் வழியாக செல்ல வேண்டி உள்ளது தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக உள்ளது இந்த சாலையை உடன் சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குண்டு குழியுமாக உள்ள சாலையில் வாழைக்கன்று நட்டு நூதன போராட்டம் நடைபெற்றது

இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சி. மணிகண்டன் , மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் எம்.ராஜமாணிக்கம், டி.இராமலிங்கம், டி. குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர்.