பெரியகுளம் கம்பம் சாலை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது திருவிழாவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இவரது மகன் கைலாசநாதர் அன்பர் பணி குழு நிர்வாகி ஜெய பிரதீப் தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கம்பம் சாலை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் வைகாசி, பெருத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அம்மனுக்கு மருத்துவர் முத்து குகன் கரகம் எடுத்து வந்து செலுத்தினார்
இதனை தொடர்ந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர் பக்தர்கள் அம்மனுக்கு அக்கினி சட்டி எடுத்து வந்தனர் இதற்கு முன்னதாக அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்களுக்கு தேனி மண்டல ஆவின் முன்னாள் தலைவர் ஓ. ராஜா அன்னதானம் வழங்கினார்
மறவர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பழனி ராஜகோபால் செயலாளர் பாண்டி பொருளாளர் வள்ளுவன் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அறக்கட்டளை நிர்வாகி சி.சரவணன் வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி மற்றும் பொன் மயில் இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்
