ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் கழுத்தில் மண்டை ஓடி மாலையாக மாடிக்கொண்டு காளி வேடமிட்டு பேண்டு வாதிகளுடன் நடனமாடி கொண்டாட்டம்
உலகம் முழுவதும் பிரபலமான சீச்சீ சீனக் கோரி சீ பாடலை வாசித்தபடி நடனமாடி கொண்டாட்டம்மாசி மாத அமாவாசை தினத்தில், “மயான கொள்ளை’ விழா, பொதுமக்களால் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சிவராத்திரி முடிந்த பின் வரும் அமாவாசை நாளில் மயான கொள்ளை நிகழ்ச்சி பெரும்பான்மையான இந்து மயானங்களில் இவை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் அடுத்த தும்பவனம் பகுதியில் உள்ள கிராம தேவதையான ஸ்ரீ தும்பவனத்தம்மன் கோவிலில் மாசி மாதம் அமாவாசை மயான கொள்ளை ஒட்டி பிற்பகல் 12 மணி அளவில் மூலவர் துன்பவனத அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களும் தீபாராதனை நடைபெற்று சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
மயான கொள்ளை ஒட்டி அப்பகுதி பக்தர்கள் கழுத்தில் மண்டை ஓடி மாலையாக மாடிக்கொண்டு, கையில் சூலம் ஏந்தி காளி வேடமிட்டு பேண்டு வாதிகளுடன் நடனமாடி கொண்டாட்டம் வருகின்றனர்.
இதனை காண சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
கோவிலில் சுற்றியுள்ள பகுதிகளில் காளி வேடம் அணிந்து ஊர்வலம் மேற்கொண்ட பக்தர்கள் உலகம் முழுவதும் பிரபலமான சீச்சீ சீனக் கோரி சீ பாடலை பேண்ட் வாத்தியங்களில் வாசித்தபடி உற்சாகமாக நடனமாடி சென்றனர்மேலும் இந்நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் விமல் தாஸ் உறுப்பினர்கள் சண்முகம் விஜயலட்சுமி மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்