காஞ்சிபுரம் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் பரந்து விரிந்து வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களான யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காததால் 1989 முதல் போதிய இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளனர். சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவரவருக்குரிய விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும்.
அதுவரை தமிழ்நாட்டில் வாழும் யாதவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை
இதனை கண்டித்து கோகுல மக்கள் கட்சி மாநிலத் தலைவர் சேகர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள யாதவ சமூகத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
சமூக நீதி ஆட்சி என கூறும் முதல்வர் யாதவ சமூகத்திற்கு தனி ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் மாவட்டம் தோறும் புல்லாங்குழல் சின்னத்தில் யாதவ சமூகத்தினர் தனியாக சுயேச்சை வேட்பாளராக நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் சேகர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் துரை பாபு யாதவ், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் யாதவ், மாவட்ட இணைச் செயலாளர் காந்தி யாதவ், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பாளர் பாக்கம் பலராமன் யாதவ், மற்றும் காஞ்சி மாநகர தலைவர் முத்துசாமி யாதவ், கிருஷ்ணா கல்லூரி நிர்வாக இயக்குனர் மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
