தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கிராமியம்பட்டி கிராமத்தில், வீ த லீடர்ஸ் கடத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சி. சிற்றரசு தலைமையில், மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-வது நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், இந்த மண்ணின் மானத்திற்காக தன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றி, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, “மாறுவோம், மாற்றுவோம்; சுற்றுச்சூழலை பாதுகாப்போம். இயற்கை நம் சொத்து; பாதுகாப்பது நம் பொறுப்பு. மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம். பூமி நம் வீடு; பாதுகாப்பது நம் கடமை” என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், வீ த லீடர்ஸ் சார்பில் எம். ஜெகநாதன், சுமதி செல்வகுமார், சிவசந்திரன், ஜோதிலிங்கம், பிரபாகரன், கதிரவன், வெங்கடேசன், பச்சையப்பன் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *