கோவை தடாகம் சாலையில் உள்ள கே.என்.ஜி.புதூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவிலில், உலக நலன் வேண்டி ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி தீமிதி திருவிழா இந்த ஆண்டு 15-வது ஆண்டாக சிறப்பாக நடைபெற உள்ளது.

கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஞானசேகர சிவாச்சாரியார் தலைமையில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் பல்வேறு சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் திருவிழா நடைபெறவுள்ளது.

விழாவையொட்டி கணபதி ஹோமம், திருக்கல்யாண வைபவம், கரகம் எடுத்தல், பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற உள்ளன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக குண்டம் இறங்குதல், பூவோடு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல்,பால்குடம், குத்துவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 93632 00801 மற்றும் 95004 91801 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *