துறையூர் ஜூலை-15

திருச்சி மாவட்டம் துறையூர் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக வழக்கறிஞர் செல்லதுரையை தமிழ்நாடு அரசு நியமிக்கப்பட்டதற்கான நியமன ஆணையை 11/07/2026 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள்அவர்கள் வழக்கறிஞர் செல்லதுரையிடம் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் வழங்கிய ஆணையை 13/07/2026 அன்று துறையூர் சார்பு நீதிபதியிடம் வழங்கி பொறுப்பேற்றுக்கொண்டார்.கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக புதிதாக பொறுப்பேற்ற வழக்கறிஞர் செல்லதுரைக்கு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *