தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் நுகர்வோர்களுக்கான புத்தாக்க பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .சதீஸ், துவக்கி வைத்து, இப்புத்தாக்க பயிற்சி கையேடுகளை பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்கள்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் .தணிகாசலம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கதிரேசன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மூத்த வழக்கறிஞர், உறுதிமொழி ஆணையர் முரளி, தருமபுரி மாவட்ட தன்னார்வ நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் சம்பத்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்