துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் முதல் கட்டமாக அக்டோபர் 27ஆம் தேதி 12 வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக நகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சில காரணங்களால் 6 வார்டுகளில் மட்டுமே வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 1வது வார்டில் 27/10/2025 அன்று நகர்மன்ற உறுப்பினர் ஆர்.லலிதா தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் நகராட்சி ஆணையர் கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.1வது வார்டுக்கு உட்பட்ட சிவன் கோயில் பின்புறம் மேட்டுத்தெரு வரை உள்ள தெருக்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், சாலையை மேம்படுத்தவும், காவிரி குடிநீர் பைப் லைன் வழங்கியும் காவிரி நீர் சரிவர வருவதில்லை என புகார் அளித்தனர்.

இதனை ஏற்ற ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில் சுகாதார ஆய்வாளர் மோகன்ராஜ்,நகர ஆய்வாளர் கலைப்பிரியன், மேற்பார்வையாளர் சரவணன், மேஸ்திரி மணி மற்றும் ராஜ மணவாளன்,பிரபு, கோவிந்தராஜ் ,தமிழரசன், ரமேஷ் ,குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்