துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார கிளை நூலகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், எழுத்தாளர், கவிஞர் சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன் எழுதிய “பெரிய வானம்” (கவிதை) “அவளும் நானும்”,”சில்வியா வின் முத்தம்”,(சிறுகதைகள் தொகுப்பு நூல்கள்) மற்றும் ஆசிரியர், கவிஞர்,முசிறி பத்மா எழுதிய ஜெனிதா பப்ளிகேஷன்ஸ் வெளியீடான “ஆழ்மனதின் ஆகாசப் படுக்கைகள்”(கவிதைகள்) ஆகிய நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட செய்தியாளர் வெ.நாகராஜீ, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கரு.ஜெயக்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் சிக்கத்தம்பூர் கரு.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று நூலகர் பாலசுந்தரத்திடம் மேற்கண்ட நூல்களை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து துறையூர் நூலக வாசகர் வட்டம் சார்பில் படைப்பாளிகளுக்கு இனிய நல் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கப்பட்டது.துறையூர் கிளை நூலகத்திற்கு நூலகராக பாலசுந்தரம் பொறுப்பேற்றதிலிருந்து அதிக உறுப்பினர்களை சேர்த்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து துறையூர் நகருக்கு பெருமை சேர்த்த நூலக்கர் பாலசுந்தரத்திற்கு வழக்கறிஞர் கரு.ஜெயக்கண்ணன் வாழ்த்துகளையும் நன்றிகளையும்
தெரிவித்தார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
