சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெள்ளக்கல்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இம் முகாமை ஓமலூர் வட்டாட்சியர் ரவிக்குமார் ஒன்றிய செயலாளர் பொன் மகாராஜன் முன்னாள் தலைவர் கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால் உமாசங்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பின்னர் மனுக்களை பெற்றனர். முகாமில் 15 துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் மகளிர் உரிமைத்தொகை இலவச வீட்டு மனை பட்டா பட்டா மாறுதல் இலவச வீடுகள் போன்ற கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். கோரிக்கை மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி அவர்கள் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கருப்பூர் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் கிராம நிர்வாக அலுவலர் குமார் முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணன் மாவட்ட பிரதிநிதி மனோகர் மற்றும் பாலு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தலைவர் உமா மகேஷ்வரி தங்கராஜ் எக்ஸ் துணைத்தலைவர் ராஜா கவுண்டர் நவீன் ரவி சக்திவேல் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை ஓமலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால் உமாசங்கர் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி செயலாளர் நாகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
